கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி ஆட்டோ நசுங்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த பேருந்து ஒன்று ஆட்டோ மீது மோதியது. ஏற்கனவே முன்னாள் பேருந்து இருந்ததால் 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கிய ஆட்டோ நசுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.