ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் YouTube சேனல்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதி டிசம்பர் முதல் அமலுக்கு வர உள்ளது.
ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube-ல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது.
குழந்தைகள் யூடியூப்பை பயன்படுத்த முடியும். ஆனால் அவர்களுக்கென தனி யூடியூப் சேனல்களை வைத்திருக்க அனுமதி கிடையாது. டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பு தனது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறியுள்ளார்.