ரயிலில் பயணம் செய்பவராக இருந்த, இந்த செய்தி உங்களுக்கானது. அதாவது, பண்டிகை காலம் தொடங்கியதும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். ஜெனரல் டிக்கெட் பெற மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியிருக்கும்.
ஆனால் இப்போ இந்த பிரச்சனையே இல்லை. எப்படினு தானே கேக்குறீங்க??
ஆமாம். ரயில்வே பணிகளின் சிரமத்தை குறைக்க UTS என்ற மொபைல் ஆப் கொண்டுவந்துள்ளது. அதாவது, UTS (Unreserved Ticketing System) என்பது இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் ஆகும். இந்த ஆப்பை CRIS (Centre for Railway Information Systems) வடிவமைத்துள்ளது. இந்த ஆப் மூலம் ஜெனரல் டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் பாஸ் ஆகியவற்றை வீட்டில் இருந்தபடியே புக் செய்துக்கொள்ளலாம்.
இந்த ஆப் மூலம் புக் செய்யப்படும் டிக்கெட், டிஜிட்டல் வடிவில் நேரடியாக மொபைலுக்கு வந்து விடும். UPI பயன்படுத்தி பாதுகாப்பாகவும் விரைவாகவும் பணம் செலுத்தலாம்.
சரி இந்த ஆப் எப்படி download செய்வது, எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்!!
அதாவது Google Play Store அல்லது Apple App Store-இல் இருந்து “UTS” ஆப்பை பதிவிறக்கம் செய்யலாம். பின்னர், மொபைல் எண்ணை உள்ளிட்டு கணக்கை உருவாக்கவும். உள்நுழைந்து “Book Ticket” விருப்பத்தை கிளிக் செய்து, பயண நிலையம், தேதி மற்றும் தேவையான தகவல்களை நிரப்பி தொடரவும். பணம் செலுத்தி, உங்கள் டிக்கெட்டை உடனடியாக மொபைலில் பெற்றுக்கொள்ளலாம்.
இனி கூட்டத்தில் வரிசையில் நிற்காமல், வீட்டில் இருந்தபடியே டிக்கெட் புக் செய்யுங்கள்.