Monday, February 23, 2026

பயணிகளே கவனம்., ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்..!

Indian Railways பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2026 மார்ச் 1 முதல், UTS on Mobile செயலி மூலம் பொதுத் டிக்கெட் மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக புதிய RailOne செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யுடிஎஸ் செயலியை திறக்கும் போது, RailOne செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவிக்கும் பாப்-அப் தகவல் தோன்றும். இதன் மூலம் பயணிகள் புதிய செயலிக்கு மாற்றப்படுவார்கள். மேலும், பழைய யுடிஎஸ் செயலியில் செய்யப்பட்ட முன்பதிவுகள் அனைத்தும் RailOne செயலிக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

RailOne செயலி “ரயில்வே சூப்பர் ஆப்” என அறிமுகப்படுத்தப்படுகிறது. அனைத்து டிக்கெட் சேவைகளும் ஒரே தளத்தில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிக்கெட் பதிவு செயல்முறை எளிமையாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இனி பொதுத் டிக்கெட் (General) மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற பயணிகள் RailOne செயலியை பயன்படுத்த வேண்டும். டிஜிட்டல் இந்தியா முயற்சியின் ஒரு பகுதியாக, ரயில்வே துறை பயணிகளின் அனுபவத்தை மேலும் நவீனப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

Related News

Latest News