ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது, ஜேசிபி இயந்திரத்தால் மோத முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கொள்ளளவை எட்டிய குளத்தில் இருந்து, முறையான திட்டமிடல் இல்லாமல், தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த போது, ஜேசிபி ஓட்டுநர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது ஜேசிபியை மோதுவது போல் இயக்கினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஜேசிபி ஓட்டுநர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.