Wednesday, July 30, 2025

செய்தியாளரை ஒருமையில் பேசி செல்போனை பிடுங்கிய உதவி காவல் ஆய்வாளர்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதராண்யம் அடுத்த கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் இவரது மனைவி வெண்ணிலா. வெண்ணிலா நேற்று தூக்கு மாட்டி இறந்தாக கூறப்படுகிறது. திருமணம் ஆகி 3 ஆன நிலையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், இன்று நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று உடல் கூறாய்வு செய்து பிரேதத்தை அமரர் ஊர்தியில் ஏற்றி கணவர் முருகானந்தம் ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் காவல்துறையினர் முறையான விசாரணை மேற்க்கொள்ளவில்லை என கூறி அமரர் ஊர்தியை மறைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது வேதாரண்யம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் செய்தி எடுக்க வேண்டாம் என மிரட்டும் தொனியில் கூறினார்.

அப்போது சம்பவம் நடந்த இடத்தை கேட்ட போது செய்தியாளரை ஒருமையில் பேசி செல்போனை பிடிங்கி தாக்கி கீழே தள்ளி விட்டார். அதை வீடியோ எடுக்க முயற்சித்த மற்றொரு செய்தியாளரின் செல்போனை உதவி காவல் ஆய்வாளர் முருகானந்தம் பிடிங்கி தரமறுத்து அட்டூழியத்தில் ஈடுப்பட்டார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News