தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. மாசுவை குறைக்கும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன் Cloud seeding எனப்படும் செயற்கை மழை பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரேகா குப்தா, காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் செயற்கை மழை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டதாக கூறினார்.
வரும் 29,30ம் தேதிகளில் மேக விதைப்பு விமானம் மூலம் வடமேற்கு டெல்லியில் 5 இடங்களில் முதன்முறையாக செயற்கை மழை சோதனை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வானிலை நிலைமைகள் சாதமாக இருந்தால் 29ம் தேதி முதல் செயற்கை மழை பெய்யக்கூடும் என்றும் காற்று மாசுபாட்டுக்கு எதிரான டெல்லியின் போராட்டத்தில் இது ஒரு தொழில்நுட்ப மைல்கல்லை குறிக்கும் என்றும் முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்தார்.
