‘குட்டி புலி’, ‘ஜெயில்’, ‘அநீதி’, ‘குடும்பஸ்தன்’ போன்ற படங்களில் கலை இயக்குநராகப் பணிப்புரிந்த சுரேஷ் கல்லேரி (57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சமீபத்தில் மணிகண்டன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘குடும்பஸ்தன்’ படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியிருந்தார்.
இந்த நிலையில் சுரேஷ் கல்லேரி மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.