இனிமையான நறுமணத்துக்கும் அருமையான சுவைக்கும்
உலக அளவில் புகழ்பெற்றது அஸ்ஸாம் தேயிலை.
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தேயிலை நிறுவனமான
அரோமிகா டீ நிறுவனம் தற்போதைய உலக அளவிலான
சூழ்நிலைக்கேற்பத் தனது தயாரிப்புக்குப் பெயர் சூட்டி
கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, உக்ரைன் அதிபரின் வீரத்துக்குத் தலைவணங்கும்
வகையில் தனது புதிய தயாரிப்பான அஸ்ஸாம் பிளாக் டீக்கு
ஜெலன்ஸ்கி டீ என்று பெயரிட்டுள்ளதுடன் இந்தத் தேநீர்
ஜெலன்ஸ்கியைப்போல வலிமையானது என்று கூறியுள்ளது.
இதற்கு கடுமையான விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.
உக்ரைன் அதிபரின் பெயரைத் தனது தயாரிப்புக்கு சூட்டி
செலவில்லாத விளம்பரத்தைத் தேடிக்கொள்கிறது என்று
வலைத்தளத்தில் விமர்சித்து வருகின்றனர்.
சிலரோ ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா
நடுநிலை வகிக்கும்போது இந்திய நிறுவனம் அதற்கு எதிரான
நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.