விழுப்புரம் காகுப்பத்தை சேர்ந்த காத்தமுத்து என்பவர் தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கியதாக துப்புரவு ஆய்வாளர் மதன் குமார் கைது செய்யப்பட்டார். லஞ்சம் வாங்கிய போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதன் குமார் லஞ்ச ஒழிப்பு துறையிடம் கையும் களவுமாக சிக்கினார்.