துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகன் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி நடைபெற்றது. அப்போது அதிபர் மாளிகை, நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய அரசு கட்டடங்கள் தாக்கப்பட்டன. இந்த கலவரத்தின்போது சுமார் 290 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அரசு தரப்பில் உயர்மட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. விசாரணையில் பல ராணுவத்தினர் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடையவர்கள் என உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட 63 ராணுவ அதிகாரிகளை கைது செய்ய இஸ்தான்புல் நீதிமன்றம் பிடிவாரண்டுகளை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.