கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் சேலம் ஆட்சியர் அலுவலக சாலை, அரசு கலைக்கல்லூரி சாலை சுந்தர் லாட்ஜ், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடிகர் விஜய் கண்டித்து பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் “தமிழக அரசே 39 அப்பாவி உயிர்களை பழிவாங்கி தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலை குற்றவாளி என கைது செய் தமிழ்நாடு மாணவர் சங்கம்” என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.