Wednesday, July 16, 2025

இறுக்கமான ஜீன்ஸ் அணிகிறீர்களா..? உங்களுக்கு இந்த பிரச்சனைகள் வரலாம்

ஃபேஷன் உலகில் ஜீன்ஸ் ஒரு அசைக்க முடியாத அங்கம். ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் பிடித்தமான உடையாக மாறிவிட்டது. ஆனால், இந்த ஜீன்ஸ்கள், குறிப்பாக மிகவும் இறுக்கமான ஸ்கின்னி ஜீன்ஸ்கள், நம் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இறுக்கமாக ஜீன்ஸ் அணிவது நமது தோலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் தோல் சிவத்தல், எரிச்சல், பூஞ்சை மற்றும் பாக்டீரிய தொற்றுகள் கூட அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் வயிற்று வலி வரலாம். இந்த ஆடைகள் அடிவயிற்றின் கீழ் பகுதியில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

நீண்ட நேரம் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால், அடிவயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனமடைகின்றன. இது நாளடைவில் முதுகு, இடுப்பு மற்றும் கால்களில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.

ஃபேஷன் முக்கியம் தான், ஆனால் ஆரோக்கியம் அதைவிட முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறுக்கமான ஜீன்ஸ்களுக்குப் பதிலாக, சற்று தளர்வான, காற்றோட்டமான ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news