ChatGPT பயன்படுத்துறீங்களா?ஆபத்து., OpenAI விடுத்த பகீர் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தி வரும் OpenAI நிறுவனம், இப்போது ஒரு அதிர்ச்சி தரும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது! அதாவது, தங்கள் நிறுவனத்தின் புதிய AI மாடல்களின் சைபர் திறன்கள் இப்போது விபரீதமாக அதிகரித்துவிட்டன என்றும், இதன் காரணமாக அடுத்து வரவிருக்கும் மாடல்கள், இணையப் பாதுகாப்புக்கு ‘மிகப் பெரிய அச்சுறுத்தலை’ (High Cybersecurity Risk) உருவாக்கலாம் என்றும் சாட்ஜிபிடி-யின் தாய்க்கிளையான OpenAI கூறியுள்ளது.

AI ஏஜென்ட்கள் மூலம் நடக்கும் சைபர் தாக்குதல்கள் குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இப்போது OpenAI-யே அதிகாரப்பூர்வமாக இதை ஒப்புக் கொண்டுள்ளது! இந்த AI மாடல்கள், வலுவான பாதுகாப்பு கொண்ட அமைப்புகளுக்கு எதிராக, ‘ஜீரோ-டே ரிமோட் எக்ஸ்ப்ளாய்டுகளை’ (Zero-day remote exploits) உருவாக்கி, சிக்கலான தொழில் அல்லது நிறுவன ஊடுருவல்களைச் செய்ய உதவலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஹேக்கர்களின் வேலை இனி AI பார்த்துக் கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளது!

AI ஹேக்கர்களை உருவாக்கினாலும், அதே AI-யை வைத்துத்தான் தற்காப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் OpenAI இருக்கிறது. அதனால், சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள, AI மாடல்களை மேலும் வலுப்படுத்தவும், பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கவும் தாங்கள் முதலீடு செய்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஊடுருவலைத் தடுக்க, அணுகல் கட்டுப்பாடுகள் (Access Controls), கண்காணிப்பு (Monitoring) போன்ற பல அடுக்குப் பாதுகாப்பு முறைகளை நம்பியிருப்பதாகவும் OpenAI குறிப்பிட்டுள்ளது. AI-யின் இந்த திடீர் வலிமை, இப்போது டெக் உலகை ஒரு புதிய சிந்தனைக்குத் தள்ளியுள்ளது. இனிமேல், நாம் ஒருபுறம் AI-யை வரவேற்றாலும், மறுபுறம் அது உருவாக்கும் சைபர் ‘அரக்கனிடமிருந்து’ நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

Related News

Latest News