Wednesday, April 30, 2025

‘NEET’ எழுதப் போறீங்களா? ‘FIRST’ இதை இப்படி செய்யுங்க ..!

இந்த ஆண்டு NEET UG 2025 தேர்வுக்கு பதிவு செய்தவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதைத் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம்.

நுழைவுச் சீட்டை இல்லாமல் தேர்வு மையத்திற்குள் நுழைய முடியாது என்பதால், உடனடியாக இதைப் பதிவிறக்கம் செய்து வையுங்கள். நுழைவுச் சீட்டை பெற, விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி, வேட்பாளர் போர்ட்டலில் உள்நுழைய வேண்டும்.

அதற்கான படிகள்:

முதலில், neet.nta.nic.in வலைத்தளத்துக்கு செல்லுங்கள். 

அதற்குப் பிறகு, ‘NEET UG 2025 ஹால் டிக்கெட்’ என்ற இணைப்பை கிளிக் செய்யவும். 

உங்கள் விண்ணப்ப எண், கடவுச்சொல்லை உள்ளிட்டு, நுழைவுச் சீட்டை PDF வடிவில் திரையில் காணலாம். 

அதை டவுன்லோட் செய்து, பிரிண்ட் எடுத்து பாதுகாப்பாக வையுங்கள்.

இந்த ஆண்டு NEET UG தேர்வு மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. MBBS, BDS, BAMS, BUMS, BHMS போன்ற மருத்துவப் பாடநெறிகளுக்கான இத்தேர்வு, 552 இந்திய நகரங்களிலும், 14 வெளிநாட்டு நகரங்களிலும் நடைபெறும். 

தேர்வு முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, மொத்த கேள்விகள் 180தான். விருப்பக் கேள்விகள் நீக்கப்பட்டுள்ளன. தேர்வு கால அளவு 3 மணி நேரமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

முந்தைய ஆண்டு விவகாரங்களை நினைவுபடுத்தினால், நுழைவுச் சீட்டு, முடிவுகள், மறுதேர்வுகள் என பல மாற்றங்கள் நடந்தன. எனவே, இந்த ஆண்டு அனைத்தையும் கவனமாகச் செய்ய வேண்டும்.

நீங்கள் NEET எழுதப்போறீங்கனா, இப்போதே உங்க ஹால் டிக்கெட்டை டவுன்லோட் பண்ணி வையுங்க. வெற்றி உங்களுக்கே!

Latest news