இந்தியாவில் 120 கோடி பேருக்கு மேற்பட்டோர் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். இதிலிருந்து சுமார் 95 கோடி பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள். ஆனால், செல்போன் பயனர்களுக்கு மோசடி மற்றும் தவறான அழைப்புகள் காரணமாக நிதி இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்த பிரச்சனையைத் தீர்க்க, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் இணைந்து புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளன. அதாவது, தொலைபேசியில் சேமிக்கப்படாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் தொடர்பான பெயர் மற்றும் தகவல்கள் பதிவாகும்.
உங்கள் சிம் கார்டில் இல்லாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், அந்த எண்ணுக்கு பெயர் விவரமும் இணைந்து காட்டப்படும். இது ஆரம்பத்தில் 4ஜி அலைக்கற்றை சேவையில் அமல்படுத்தி பின்னர் பிற அலைக்கற்றைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
தெரியாத எண்களில் இருந்து வரும் மோசடி, விளம்பர அழைப்புகளை எளிதாக அடையாளம் காண முடியும். தொலைதொடர்பு ஆணையமும் அமைச்சகமும் இணைந்து இந்த திட்டத்தை விரைவில் கொண்டு வர உள்ளனர்.
