செல்போனை தலைக்கு அருகே வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்…?

287
Advertisement

பிரிக்க முடியாதது எதுவெனக் கேட்டால் மனிதனும் செல்போனும் எனலாம்.
அந்தளவுக்கு ஒருவரே பல செல்போன்களுடன் வாழும் நிலைதான் தற்போது
நிலவுகிறது.

பகலில் மட்டுமன்றி, இரவிலும் கட்டியணைத்துக்கொண்டு உறவாடாத
நிலையில்தான் செல்போனை எந்நேரமும் வைத்துக்கொண்டுள்ளனர்
இந்த செல்போன் யுகவாதிகள்.

செல்போன் பயன்பாட்டால் எந்தளவுக்கு நன்மைகள் ஏற்படுகிறதோ
அந்தளவுக்கு தீமைகளும் ஏற்படுகிறது.

செல்போன்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளால் பல்வேறு
தொல்லைகள் நமது உடலுக்கு ஏற்படுகிறது. செல்போன்களால் ஏற்படும்

இந்தத் தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளப் பல வழிகள் உள்ளன.

1.செல்போன்கள் வெளிப்படுப்படும் கதிர்வீச்சுகளால் மூளையே செயல்
இழந்துபோகும் அபாயம் உள்ளது. இந்தக் கதிர்வீச்சுகளால் மூளையில்
புற்றுநோய்க் கட்டிகள் உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள்
கூறுகின்றனர். தினமும் 30 நிமிடங்களுக்குமேல் செல்போனில் பேசுபவர்களுக்கு
இந்த நோய் உருவாக வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதனால், செல்போனில் அதிக நேரம் அளவளாவுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

2.வீடு, அலுவலகம், தொழிற்சாலை போன்ற இடங்களில் இருக்கும்போது
செல்போன் பயன்படுத்துவதற்குப் பதிலாகத் தொலைபேசியைப் பயன்படுத்துங்கள்.

3.செல்போனில் பேசுவதைக் காட்டிலும் SMS, WHATSAPP வசதிகளைப் பயன்படுத்தலாம்.

4.குழந்தைகளிடம் செல்போன் கொடுக்காதீர். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி
குறைவாக இருப்பதால், அவர்களைக் கதிர்வீச்சு எளிதில் தாக்கக்கூடும்.

5.செல்போன் சிக்னல் குறைவாக உள்ள இடங்களில் கதிர்வீச்சு அதிகம் இருக்கும்.
அத்தகைய பகுதிகளில் செல்போனில் பேசுவதைத் தவிருங்கள்.

6.காதில் வைத்துப் பேசுவது, ஹெட்போன் மாட்டிக்கொண்டு பேசுவது
பாட்டுக் கேட்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம். மாறாக, யாருக்கும்
தொந்தரவில்லாத வகையில் LOUD SPEAKERஐப் பயன்படுத்திப் பேசலாம்.

7.அருகிலேயே செல்போனை வைத்துக்கொண்டு தூங்கும் வழக்கமிருந்தால்
அதனை இன்றே விட்டுவிடுங்கள்.

8.மற்றவர்களைத் தொடர்புகொள்ளும்போது ரிங் போகும்போதே செல்போனைக்
காதில் வைத்துக்கொள்வதற்குப் பதிலாக, எதிர்முனையில் உள்ளவர் பேசத்தொடங்கிய
பிறகு, உங்கள் செல்போனைக் காதில் வைத்துக் கேளுங்கள்.. ஏனெனில், பேசும்போது
வெளிப்படும் கதிர்வீச்சைவிட டயல்செய்யும்போது 14 மடங்கு அதிகம் கதிர்வீச்சு
வெளிப்படுவதாகக் கணக்கிட்டுள்ளனர்.

9.செல்போனை வலது பக்கக் காதில் வைத்துப் பேசாமல் இடது பக்கக் காதில்
வைத்துப் பேசுங்கள். ஏனெனில், வலது பக்கக் காதில் செல்போனை வைத்துப்
பேசும்போதுதான் மூளை அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாகத்
தெரியவந்துள்ளது-

10.செல்போனில் கேம் விளையாடுவதையும் தவிர்க்கலாம். குறிப்பாக,
பயணத்தின்போது கேம் விளையாடுவதால், அதனைப் பார்ப்பதற்கு கண்கள்
சிரமப்படுவதால் கண்களிலுள்ள லென்ஸ் பாதிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

11.செல்போனை வைப்ரேட் மோடில் வைப்பதையும் தவிர்க்கவும்.

12.செல்போனை சட்டைப் பையில் வைப்பதையும் தவிர்க்கவும். சட்டைப்
பையில் செல்போனை வைத்திருந்தால் இதயம் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

13.பேசும்போது செல்போனின் இரண்டு பக்கவாட்டுகளைப் பிடித்துக்கொண்டு
பேசுங்கள். மாறாக, செல்போனின் பின்பக்கத்தை மூடிக்கொண்டு பேசவேண்டாம்.

செல்போனின் பயன்பாடு நம்முடைய வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதேசமயம் விலைகொடுத்து வாங்கிய செல்போனை நம்மைப் பாதிக்கும்விதமாகப்
பயன்படுத்த வேண்டாமே….