இரவுநேர நெட்டிசனா நீங்கள்? காத்திருக்கும் இலவசப் பரிசு

220
Advertisement

இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.
இரவு நேரத்தில் அதிக நேரம் பேஸ்புக், வாட்ஸ் அப்,
இன்டர்நெட்டில் பொழுதைப் போக்கும் நெட்டிசன்களுக்கு
இலவசப் பரிசு காத்திருக்கிறது.

நமது உடம்பில் நேரத்தைத் தாமாகவே ஒழுங்குபடுத்தும்
BIOLOGICAL CLOCK SYSTEM உள்ளது. இதனை வழிநடத்தும்
ஒரு சுரப்பி ஒவ்வொருவர் தலையிலும் உள்ளது.

அதுதான் பினியல் சுரப்பி.

Advertisement

PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைந்துள்ளது.
இந்த சுரப்பி ஓர் அரிய பொருளைத் தினமும் இரவில்
மெலடோனின் என்னும் திரவத்தை சுரக்கிறது.

புற்றுநோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து
இந்தப் பொருளில் உள்ளது.

இந்த மெலடோனின் சுரக்க வேண்டுமெனில்,
ஒரே ஒரு கண்டிஷன்… என்ன தெரியுமா…?

இரவில் இருளாக இருக்க வேண்டும். இரவின்
இருளில்தான் பினியல் சுரப்பி இந்த திரவத்தை சுரக்கிறது.
இந்த சுரப்பியோடு இணைந்துள்ள பார்வை நரம்பு மூலமாக
அது இரவு நேர இருளை உணர்ந்துகொள்ளும்.

ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்குப் பிறகு, இருளில்
சுரக்கும் மெலடோனின் நமது ரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.
நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக்கொண்டிருந்தால் பினியல்
சுரப்பி மெலடோனின் திரவத்தை சுரக்காது.

பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆரம்பித்து
அதிகாலை 5 மணிக்கு நிறுத்திவிடும்.

இரவில் நீண்டநேரம் விழித்திருந்தால் இந்த திரவம் சுரக்காது.
எனவே, முன்கூட்டியே தூங்கி அதிகாலையில் எழுந்தால் புற்று
நோய் வராது. நமது ஆரோக்கியம் இவற்றில் அடங்கிக்கிடக்கிறது.

செல்போன்களை நமது அறிவு, திறமை வளர்ச்சிக்குப்
பயன்படுத்திக்கொள்வோம். விலைகொடுத்து வாங்கிய
பொருளால் விலைமதிப்பற்ற நமது ஆரோக்கியத்தைக்
கெடுத்துக்கொள்ள வேண்டாமே…

ஆரோக்கியமாக இருந்தால் எத்தனை செல்போன்கள்
வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். எத்தனை
செல்போன்கள் இருந்தாலும் ஆரோக்கியத்தை வாங்கவே முடியாது.