இத்தனை லட்சம் பேர் ரயில் விபத்தால் மரணமா?அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்..!

245
Advertisement

ஒடிசா ரயில் விபத்து சம்பவம் நாட்டின் ஒட்டுமொத்த ரயில்கள் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த ஒரு நீண்ட சுயவிசாரணை செய்து கொள்ள வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில்,ரயில்வே பாதுகாப்பு குறித்த பல்வேறு தரவுகள் நம்மை திகைக்க வைக்கின்றன.

இந்திய ரயில்வே துறை பல புதுமைகள் படைத்து  நவீன மயமாகி வருகிறது என்று கூறப்பட்டாலும், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2.6 லட்சம் பேர் ரயில் விபத்தினால் மரணமடைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ரயிலில் இருந்து தவறி விழுவது, ரயில் மோதுவது ஆகியவையே  பெரும்பாலான மரணங்களுக்கு காரணம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின், விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்அறிக்கை படி, 2011ல் ரயில் விபத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2013ல் 27,765 ஆக அதிகரித்தது.

2014ம் ஆண்டில் இருந்து ரயில் விபத்தால் ஏற்படும் மரணங்கள் குறையத் தொடங்கிய நிலையில் , 2020ல் கொரோனா நோய்த் தொற்றின் போது அப்பட்டமாக குறைந்தது. அந்தாண்டு, பெரும்பாலான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாததால், விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை வெறும் 16,431 குறைந்தது.

2021 ல் ரயில் விபத்து மரணங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தாலும், கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலையைக் எட்ட விலை. 2021ல் ஏற்பட்ட 16,431 ரயில் விபத்து மரணங்களில், 11,036 மரணங்கள் ரயில் தண்டவாளத்தில் விழுந்தோ, ரயில் மோதியோ இறந்துள்ளனர்.