சென்னையில் வாழ்ந்த ஆதிமனிதர்கள்!

341
Advertisement

நம்ம சிங்கார சென்னையில் ஆதிமனிதர்கள்  வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சென்னை அதிரம்பாக்கத்தில் நான்கு வருடங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் பொழுது சென்னையில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமான கற்கருவிகள் கிடைத்துள்ளன என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டிருகிறது.

இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது ,அதாவது இடைக்கற்காலம் என்பது பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலமே இடைக்கற்காலம் என்றழைக்கப்படுகிறது.

ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 3,25,000 லிருந்து 3,85,000 இடைப்பட்ட காலங்களில் அங்கு கற்கலாம் நிலவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது .

சமீபகாலம் வரை கற்கருவிகளை பயன்படுத்தும் கலாசாரம், 90,000 வருடங்களிலிருந்து 1,40,000 வருடங்களுக்குள் இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், சென்னையைச் சேர்ந்த ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்பு, மனித இனப் பரவல் குறித்த ஆய்வில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.