பீகார் மாநிலத்தில் இருப்பிட சான்றிதழ் கோரி அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு முழுமையான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், டிரம்ப் புகைப்படத்தை பயன்படுத்தி, ஆன்லைனில் இருப்பிட சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.
அரசு நிர்வாகத்தின் நம்பிக்கையையும், நேர்மையையும் சிதைக்கும் வண்ணம், திட்டமிட்டு இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளனர்.