விமான விபத்தில் சிக்கிய இரண்டுபேரின் உயிரை APPLE i PAD மூலம் காப்பாற்றிய செயல் தொழில்நுட்பத்தின் உன்னதத்தை உணர்த்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த 58 வயதான தந்தையும் 13 வயதான அவரின் மகளும் நவம்பர் 14 ஆம் தேதி இரண்டுபேர் பயணிக்கக்கூடிய ஒரு தனி விமானத்தில் பயணித்துள்ளனர். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் ரேடாரிலிருந்து மாயமாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து அமெரிக்க விமான மீட்புப் படை 5 மணி நேரமாகத் தேடடத் தொடங்கியது. கடைசியாக ரேடார் சிக்னல் கிடைத்த இடத்தில் அந்த மாயமான விமானத்தைத் தேடியது.
விமானப் படையுடன் சேர்ந்து 30 தன்னார்வலர்களும் கிரிட் மூலம் அந்தப் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதுவும் திடீரென்று துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த விமானத்தை இயக்கிய பைலட்டின் மனைவியின் செல்போன் எண் மீட்புப் படை குழுவுக்குக் கிடைத்தது. அதன்மூலம் பைலட்டின் செல்போன் இருக்கும் இடத்தை ஆய்வுசெய்தனர்.
அப்போது விமானத்தில் பயணித்த சிறுமியிடம் ஆப்பிள் ஐபேட் இருந்தது தெரியவந்தது. அந்த ஆப்பிள் ஐ பேடின் ஜிபிஎஸ் தகவல்கள் மூலம், விமானம் புறப்பட்ட இடத்திலிருந்து 7 மைல் தொலைவில் அடர்ந்த வனப்பகுதிக்குள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அங்கு விரைந்த விமான மீட்புப் படை தந்தை, மகள் இருவரையும் காப்பாற்றியது. சிறிது காயங்களுடன் இருந்த அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை அறிந்து பெருமிதத்தில் உள்ளனர் பொதுமக்கள்.