Thursday, December 25, 2025

முன்னணி AI நிறுவனத்தை குறிவைக்கும் ஆப்பிள் நிறுவனம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் , மெடா உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக ஏஐ உருவாக்காமல் ஏஐ தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வரும் Perplexity AI நிறுவனத்தை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் தான் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரு வேளை இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் அதிக தொகை கொடுத்து வாங்கக்கூடிய ஒரு நிறுவனமாக Perplexity AI இருக்கும் என கூறப்படுகிறது.

Related News

Latest News