Wednesday, January 15, 2025

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்

குழந்தைகள் அனைவரும் புதிய பாடத்திட்டத்தில்
புதிய கற்பித்தல் முறைகளுக்காக SMART PHONE
பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகள் தவறுதலாகப்
பார்க்கக்கூடாத வீடியோவையோ, வயதுக்குமீறிய
விஷயங்களையோ பார்க்காமலிருக்க
செல்போனில் செய்யவேண்டிய மாற்றங்கள்

உங்களுடைய SMART PHONEல் PLAY STOREக்குச் சென்று
SETTINGSல் PARENT CONTROL OPTIONஐ ON செய்யவும்.

அதன் கீழே உள்ள APPS AND GAMESஐக் கிளிக் செய்து
12+ல் டிக் செய்யவும்.

அடுத்ததாக, FILLMSஐக் கிளிக்செய்து U என்பதை டிக்
செய்யவும்.

அதேபோல், YOU TUBE SETTINGSல் RESTRICTIONS
MODEஐ ON செய்யவும்.

இதனால், குழந்தைகள் SMART PHONE பயன்படுத்தும்போது
தேவையற்ற விஷயங்கள் மற்றும் வீடியோ குறுக்கிடாமல்
பாதுகாப்பானதாக இருக்கும்.

ஊரடங்கு நேரத்தைப் பயனுள்ளதாக்கி கல்வியில் சிறந்துவிளங்க
பெற்றோர் அவசியம் இந்த விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.
எல்லாக் குழந்தைகளும் நல்லக் குழந்தைகள்தான். ஆனால்,
அவர்கள் சிறந்து விளங்குவது அன்னையின் வளர்ப்பிலேதான்
உள்ளது.

தொழில்நுட்பம் குழந்தைகளைத் தவறான பாதைக்குள் அழைத்துச்
சென்றுவிடாதபடி கண்காணிப்பது பெற்றோரின் ஒட்டுமொத்தக்
கடமையாகும். ஸ்மார்ட் போனை நல்ல முறையில் பயன்படுத்தி
கல்வியால் உயர்வடைய பெற்றோர் வழிகாட்டுதல் கண்டிப்பாகத் தேவை.

Latest news