Sunday, August 31, 2025

எறும்புகளிடம் அலட்சியம் காட்டினால் அழிவு நிச்சயம் !  பத்து பேர் மருத்துவமனையில் சிகிக்சை

ஏற்கனவே தமிழ்நாட்டில் நத்தம் என்னும் பகுதியில் மஞ்சள் எறும்புகளின் தாக்குதலால் கால்நடைகளான மாடு,ஆடு போன்றவை பாதிப்புக்குள்ளானது மட்டுமல்லாமல் அந்த கிராம மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டே வெளியேறினார் இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள இசகலபேட்டா என்னும் கிராமத்தில் உள்ள காலனியை எறும்புகள் படை தாக்கியுள்ளதாம் , இது குறித்து அந்த காலனியை சேர்த்தவர் கூறுகையில் அந்த காலனியை சேர்ந்த  பத்து பேர் இந்த எறும்புகளினால் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் இந்த நிலை தொடர்ந்தால் அந்த காலனியை விட்டே அவர்கள் வெளியேறும் நிலை ஏற்படும் என்றும் எனவே அம்மாநில சட்டமன்ற சபாநாயகரிடம் உதவி கோரியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் ,”இந்த சிவப்பு எறும்புகள் எங்களை கடிக்கிறதா என்று கூட தெரியவில்லை. எங்கள் உடலில் அவை ஏறியவுடன் அவை ஊர்கின்ற இடம் சிவப்பாகி, வீங்குகிறது. தேய்த்தால் அல்லது சொறிந்தால் அந்த இடத்தில் குழி விழுகிறது.

எறும்பு கடி காரணமாக மருத்துவமனையில் சிகிக்சை பெரும் 10 பேரில் இருவர் நீரிழிவு நோய் உள்ளவர்களாம்.எறும்புக்கடியால் சிகிச்சை பெறுகிறோம் என்றுக்கூறினால் அனைவரும் சிரிக்கிறார்கள் ஆனால் எங்கள் கிராமத்தில் இருந்து பார்த்தால் தான் அவர்களுக்கு எங்களது வலி புரியும் என்று வேதனையோடு தெரிவித்துள்ளார்.திடீரென கிராமத்தில் இந்த சிவப்பு எறும்புகளின் தாக்குதல்களுக்கு அக்கிரமத்தை சுற்றியிருக்கும் எறும்பு குன்றுகளாக இருக்கலாம் என்றும் முறையான தடுப்பு மருந்துகள் இருந்தால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News