ஒடிசா மாநிலத்தில் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவனை மற்றொரு மாணவன் கத்தியால் குத்தியுள்ளான்.
மாணவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த ஆசிரியர்கள் மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பெயரில் கத்தியால் குத்திய மாணவனை போலீசார் கைது சேட்டுள்ளனர்.
இந்த கத்திக்குத்து சம்பவம் ஏன் நடந்தது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.