விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்துக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது. இதனிடையில் ‘ஜனநாயகன்’ மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜனநாயகனுக்கு போட்டியாக பான் இந்திய அளவில் ஒரு படம் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அதன்படி, பிரபாஸ் நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீசாக இருக்கிறது.
‘தி ராஜா சாப்’ படத்தில் பிரபாஸுடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். ஜனநாயகன், தி ராஜா சாப் படங்கள் அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி ஒரே நாளில் ரிலீசாக இருப்பதால் தெலுங்கு திரையுலகில் வசூலில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.