Friday, March 28, 2025

மீண்டும் ஒரு ‘அதிரடி’ மாற்றம்! பயனர்களின் பேவரைட் ‘Optionஐ’ நீக்கும் UPI?

இந்திய மக்கள் அதிகமாக பயன்படுத்தும், ஆன்லைன் பண பரிவர்த்தனை தளமாக UPI திகழ்கிறது. மக்களும் Google Pay, PhonePe, Paytm, BHIM என்று, தங்களுக்கு பிடித்த செயலியை பயன்படுத்துகின்றனர். UPIயை  கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் National Payments Corporation of India, சுருக்கமாக NPCI பாதுகாப்பு கருதி அவ்வப்போது, பல்வேறு புதிய அப்டேட்களை அமல்படுத்தி வருகிறது.

முன்னதாக ஸ்பெஷல் கேரக்டர்கள், செயல் இல்லாத மொபைல் எண்கள் ஆகியவற்றை UPIயில் இனி பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்தது. அந்தவகையில் தற்போது மேலும் ஒரு புதிய அப்டேட்டினை NPCI அறிமுகம் செய்யவுள்ளது.

அதன்படி இனி UPI ஆப்பில் ஆட்டோமேடிக் பண பரிவர்த்தனையை, பயனர்கள் மேற்கொள்ள முடியாது. UPI செயலியை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள், Pull transaction மற்றும் Push Transaction என்று 2 வழிகளில் பணம் செலுத்துகின்றனர்.

Pull transaction என்பது நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தை, கடை உரிமையாளர் உங்களுக்கு அனுப்புவார். மால்கள், சூப்பர் மார்க்கெட்கள், ஹோட்டல்களில் இதுபோன்ற பரிவர்த்தனைகள் பயன்படுத்தப் படுகின்றன. சில நேரம் 357 ரூபாய் 85 பைசா என்பதுபோல இந்த பரிவர்த்தனை தொகை இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இதில் கட்டணத்தொகை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கும்.

Push Transaction என்பது QR Codeஐ ஸ்கேன் செய்து, தொகையை நீங்கள் Enter செய்து அனுப்பும்படி இருக்கும். சுருக்கமாக சொன்னால் இந்த பரிவர்த்தனையில், நீங்களே செலுத்த வேண்டிய தொகையை தேர்வு செய்து கொள்ளலாம்.

Pull transaction ஆட்டோமேட்டிக் பணம் செலுத்தும் முறைகளுக்கு பயன்படுகிறது. மாதம்தோறும் செலுத்த வேண்டிய Gas, EB பில்கள் மற்றும் சேமிப்புகள் ஆகியவற்றுக்கு, வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இந்தமுறையை பயன்படுத்துகின்றனர்.

Netflix போன்ற OTT தளங்களும் இந்த முறையை பயன்படுத்திதான், வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட தேதியில் பணம் வசூலிக்கின்றன. தற்போது இந்த பரிவர்த்தனைக்கு தான் NPCI செக் வைத்துள்ளது. இதற்காக தற்போது வங்கிகளிடம் NPCI பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

எனவே UPI செயலியில் இந்த ஆட்டோமேட்டிக் பண பரிவர்த்தனை விரைவில் நிறுத்தப்பட்டு விடும். இதன்மூலம் UPI செயலி இன்னும் பாதுகாப்பாக மாறும். பயனர்களின் தேவையற்றை செலவுகள் கட்டுக்குள் வரும், அதோடு வங்கிகளின் நேரமும் ஏராளமாக மிச்சப்படும்.

குறிப்பாக இதன்மூலம் பணமோசடி அபாயமும் வெகுவாகக் குறையும். மொத்தத்தில் வாடிக்கையாளரின் அனுமதியின்றி பணத்தை எந்தவொரு நிறுவனமும் பெற முடியாது. எனவே இந்த முறையை விரைவில் அமல்படுத்த NPCI தற்போது தீயாக வேலை செய்து வருகிறதாம். கூடிய விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

Latest news