Saturday, March 15, 2025

மீண்டுமொரு ‘Captain’ மாற்றம்.. மறுபடியும் ‘மொதல்ல’ இருந்தா?

18வது IPL தொடர் ஆரம்பிக்க Just 1 வாரம் தான் உள்ளது. நீண்ட நாட்களாக கேப்டனை அறிவிக்காமல் இழுத்தடித்த டெல்லி கேபிடல்ஸ் கூட ஒருவழியாக, எங்களோட கேப்டன் ‘அக்சர் படேல் தான் என்று அறிவித்து விட்டனர்.

ஒருவழியாக எல்லா அணிகளும் தங்களுடைய கேப்டனை அறிவித்து விட்டன என்று, BCCIயும் நிம்மதி அடைந்தது. ஆனால் அதில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களுடைய கேப்டனை மாற்ற உள்ளதாகத், தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹைதராபாத் தவிர்த்து மற்ற 9 அணிகளும் இந்திய வீரர்களையே கேப்டனாக்கி இருக்கின்றன. அந்த அணி மட்டும் இந்தியர்களின் உலகக்கோப்பை கனவினைத் தகர்த்த, பேட் கம்மின்ஸ்க்கு கேப்டன் வாய்ப்பு அளித்து அழகு பார்த்து வருகிறது.

இதைப்பார்த்து ரசிகர்கள் கூட, ” நீங்களும் பேசாம ஒரு இந்திய வீரர கேப்டனா போட்ருங்க’ என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் ரசிகர்களின் கோரிக்கை நிறைவேறலாம் என்று தெரிய வந்துள்ளது.

கணுக்கால் காயம் காரணமாக கம்மின்ஸ், அண்மையில் நடைபெற்ற ‘சாம்பியன்ஸ் டிராபி’ தொடரில் இடம்பெறவில்லை. இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை என்பதால், IPL தொடரின் ஆரம்ப போட்டிகளில் அவர் பங்குபெற வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.

அதோடு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நடைபெறுவதால், அதற்கு தயாராகும் விதமாக பிளே ஆப் சுற்றுகளிலும் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டாராம். இதனால் மொத்தமாக அவரைத் தூக்கிவிட்டு, அணியின் இளம்வீரர் அபிஷேக் ஷர்மாவுக்கு கேப்டன் பதவியளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறதாம்.

உள்ளூர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருக்கும், அபிஷேக்கின் வெற்றி சதவீதம் 60 ஆக இருக்கிறது. மேலும் அவர் இந்திய வீரராகவும் இருக்கிறார். எனவே உலகத்தரம் வாய்ந்த ஹென்ரிச் கிளாஸன் அணியில் இருந்தாலும் கூட, எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அபிஷேக்கிற்கு கேப்டன் பதவி அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஒருவேளை அபிஷேக் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டால், 24 வயதாகும் அவர் இந்த சீஸனின் இளம்வயது கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news