Friday, August 1, 2025

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு

துணை குடியரசு தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்​நிலை காரணங்​களுக்காக கடந்த 22-ம் தேதி பதவி வில​கு​வ​தாக அறிவித்தார். அவருடைய பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதவி விலகியதால், புதிய தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 9 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி 21 வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்றும் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு ஆகஸ்ட் 25 தேதியை கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News