Thursday, January 29, 2026

2014 – 2022 ஆண்டுகளுக்கான திரைப்பட, சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு

2016-2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.

நடிகர்கள்

விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு

நடிகைகள்

கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ், சாய் பல்லவி

திரைப்படங்கள்

மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள்

எம்.இராஜ்குமார், ஆர்.பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சிவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ்

சின்னத்திரை விருதுகளுக்காக நடிகைகள்

ஆர்.ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா

தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும் பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூ.1.25 இலட்சமும் வழங்கப்படுவதுடன், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப்பரிசும் வழங்கப்படுகின்றன.

Related News

Latest News