தளபதி 67 டைட்டில் டீசர் அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்

217
Advertisement

ரிலீஸ் ஆனதில் இருந்து ‘ரஞ்சிதமே’ பாடல் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் இருக்க, வாரிசு ரிலீஸ் தேதி அறிவிப்பு விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரம்மாண்ட வாரிசு பேனர்கள் நிறுவப்பட்டுள்ளன. இது ஒரு புறம் இருக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 5ஆம் தேதி பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், படத்தின் டைட்டில் டீசருக்கென படப்பிடிப்பு டிசம்பர் 7ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்புகளால் ட்விட்டரில் தளபதி விஜய், தளபதி 67 மற்றும் வாரிசு hashtagகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.