சென்னை கொளத்தூரில் நடைபெற்ற அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்செந்தூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் உயிரிழந்தார் என கூறுவது அபாண்டமான பொய் என்று கூறினார்.
இறப்பை வைத்து அரசியல் செய்வது அண்ணாமலைக்கு வாடிக்கையாக உள்ளது என்றும், மக்களிடம் பீதியை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்பதே அண்ணாமலையின் நோக்கம் என்றும் அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டினார்.