Friday, January 24, 2025

தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் கொடுமை பற்றியும் திமுக அரசை பற்றியும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன் என கூறிய அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பிறகு சொன்னது போல தனது செருப்பை கழட்டினார்.

இன்று காலை 10 மணிக்கு என்னை நானே சாட்டையால் அடித்துக்கொள்வேன் என்று அண்ணாமலை கூறிய நிலையில் இன்று கோவையில் உள்ள அவரது இல்லம் முன்பு சாட்டையால் அடித்துக்கொண்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Latest news