போலி பாஸ்போர்ட் விவாகாரத்தில் சுரேஷ் குமார் என்பவரின் பாஸ்போர்ட் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அவரது பாஸ்போர்ட்-ஐ புதுப்பிக்க காலக்கெடு வந்துவிட்டதால் 19.04.2022 ம் தேதியன்று Renewal-க்காக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கிறார்
வழக்கு நிலுவையில் இருப்பதால் காவல்துறை Verification கோரிக்கையை நிராகரிக்கிறது.
அதன் காரணமாக சுரேஷ்குமார் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு (W.P.(MD)No.13544 of 2022) ஒன்றை தொடர்கிறார்.
அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு நீதிபதி.G.R சுவாமிநாதன் 27-07-2022 ம் தேதி பிறப்பித்த உத்தரவில் தற்போதைய உளவுத்துறை தலைவர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு Clean Chit கொடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார் என பிஜேபி தலைவர் அண்ணாமலையையும் நீதிபதி பாராட்டி இருக்கிறார்.
ஆனாலும் Q Branch பதிவு செய்துள்ள வழக்கின் புலன் விசாரணை இன்னும் முடிவடையவில்லை.
அதேநேரம்
தமிழக பாஜக தலைவர் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் NIA விசாரணைக்கோரி ஆளுநரிடம் மனு கொடுத்துள்ள விவகாரம் அவ்வளவு எளிதானதல்ல.
அதற்கு பின்னால் எவ்வளவு பெரிய பவர் பாலிடிக்ஸ் இருக்கிறதென தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமென கருதுகிறேன்.
அண்ணாமலை NIA விசாரணை கேட்டது யாருக்கு வைக்கப்பட்ட குறி ?
உளவுத்துறை தலைவருக்கா?
தமிழக முதலமைச்சருக்கா ? என பார்ப்பதற்கு முன்னால் NIA விசாரணைக்கு எடுத்த ஒரு முக்கிய வழக்கு குறித்து பார்க்கலாமா ?
ஏனென்றால் மத்திய அரசின் ஏஜென்சிகளால் தீவிரவாதிகளை அப்பாவிகள் என காப்பாற்றவும் முடியும்,
நீங்கள் தவறே செய்யாதவர்களாக இருந்தாலும் உங்களால் நாட்டிற்கே அச்சுறுத்தல் என விசாரிக்கவும் முடியம்
காரணம் வேறொன்றுமில்லை-Power politics
அதிகாரம் 12-நடுவுநிலைமை
குறள்-115
கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்
பொருள்; நடுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரிய வேண்டும்
கடந்த 2019 ஜனவரி 11-ம் தேதியன்று காஷ்மீரின் குல்காம் மாவட்டம் ஸ்ரீநகர்-ஜம்மு சாலையில் விரைந்து வந்த ஒரு i20 காரை மிர் சோதனைச் சாவடியில் தடுத்து விசாரித்தது காவல்துறை. அந்த காரில் இருந்த DSP தேவேந்திர சிங்-கிடம் விசாரித்து காரை சோதனையிட்ட போது 2 ஏகே-47 ரக துப்பாக்கிகள் சிக்கியதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்படுகிறார்
தேவேந்தர் சிங்குடன் அந்தக் காரில் பயணம் செய்த லஷ்கர் – ஈ – தொய்பாவின் முக்கியத் தளபதியான நவீது பாபா மற்றும் ஹிஸ்புல் – முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த அட்லஃப் மற்றும் இர்ஃபான் மிர் என்ற வழக்கறிஞர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு (PS- Qazigund, Distt- Kulgam, FIR No. 05/2020)
குல்காம் மாவட்டத்தில் உள்ள குவாசிகுண்ட் காவல்நிலையத்தில்
11-01-2020 தேதியன்று பதிவு செய்யப்படுகிறது. அதன்பிறகு இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையின் ஜம்மு காஷ்மீர் பிரிவு எடுத்துக்கொள்கிறது.
அதன் பிறகு என்ன நடந்ததென கூறுவதற்கு முன் ஒரு சின்ன flash back
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் -5-ம் தேதி ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டனர். அசம்பாவிதங்களை கட்டுப்படுத்த இணையதளங்கள் முடக்கப்பட்டது.
செல்போன் சேவை துண்டிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட மொத்த மாநிலமும் யாரிடமும் எந்த தொடர்பும் இல்லாமல் தனித்த உலகமாக இருந்தது.
இப்போது விஷயத்திற்கு வரலாம்..
அதாவது ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளோடு காரில் பிடிபட்ட DSP தேவேந்திர சிங் குறித்த வழக்கை NIA ஜம்மு காஷ்மீர் பிரிவு
உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Counter Terrorism and Counter Radicalization Division-னின் உத்தரவு கடிதத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்கிறது.
வழக்கு எண் RC-01/2020/NIA/JMU
பதிவு செய்யப்பட்ட தேதி: 17.01.2020
வழக்கின் தலைப்பு: Recovery of Arms Ammn from Davinder Singh, Dy. SP
இதில் ஆச்சர்யம் என்ன தெரியுமா?
அதாவது DSP தேவேந்திர சிங் தீவிரவாதிகளோடு பிடிபட்ட தேதி 11-01-2020
NIA-வின் ஜம்மு காஷ்மீர் பிரிவு
As per Government of India, Ministry of Home Affairs-ன் CTCR Division,Order No. 11011/10/2019/NIA dated 17.01.2020
கொஞ்சம் கவனியுங்கள்..
Ministry of Home Affairs-ன் CTCR Division உத்தரவு கொடுத்த வருடத்தை கவனியுங்கள் Order No.11011/10/2019/
எப்படி,
11-01-2020-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு
உள்துறை அமைச்சகம் 2019-ம் ஆண்டே உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏதாவது, எழுத்துப்பிழையாக (Typo error-ஆக) கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது தானே ?
திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு நினைவிருக்கிறதா ?
அந்த கொலை 06-02-2019 அன்று நடைபெற்றது,அன்றே வழக்கு பதியப்பட்டது.
அதை NIA 07-03-2019 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது
அதனுடைய FIR தேதியையும் ,உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்த ஆண்டையும் கவனமாக பாருங்கள்
அதாவது Ministry of Home Affairs No. 11011/08/2019//NIA, CTRC Division North Block New Delhi, dated 05.03.2019 பிறப்பித்த உத்தரவின் படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உத்தரவு எண்ணை கவனிக்கவும்
Ministry of Home Affairs No. 11011/08/2019//NIA, CTRC Division
ஏதாவது புரிகிறதா ? புரியவில்லை தானே !
ஆம் புரியாது..
வழக்கு குறித்த விபரங்களையாவது நிதானமாக படியுங்கள்
நிச்சயம் புரியும்.
இருந்தாலும் மறுபடியும் ஒரு முறை சொல்கிறேன்.
அதாவது 11-01-2020 அன்று DSP தேவேந்திர சிங் தீவிரவாதிகளோடு பிடிபட்டார்.ஆனால்,வெறும் ஆயுதங்கள் மட்டுமே அவரிடமிருந்த மீட்கப்பட்டதாக NIA வழக்கு பதிவு செய்ய 2019-ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலேயே Counter Terrorism and Counter Radicalization Division உத்தரவு பிறப்பித்துள்ளது.
அடுத்த கூத்து என்ன தெரியுமா ?
2020 ம் ஆண்டு மார்ச் மாதம் 14, 19 ஆகிய தேதிகளில் தேவேந்தர் சிங் மீதும், இர்ஃபான் மிர் மீதும் தனியாக டில்லி போலீசின் சிறப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்கிறது. பின்னர் இருவரையும்
ஜம்முவின் ஹிரா நகர் காவல் நிலையத்தில் இருந்து டில்லிக்கு அழைத்து வருகின்றனர். விசாரணைக்கு பிறகு தேவேந்தர் சிங் சிறையில் அடைக்கப்படுகிறார்.
20-05-21- ம் தேதி ஜம்மு காஷ்மீர் ஆளுநர் தேவேந்தர் சிங்கை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிடுகிறார்
அதே நேரம் மற்றொரு பக்கம் என்ன நடந்ததென்றால், டெல்லி போலீஸ் குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் தேவேந்தர் சிங் ஜாமினில் வெளிவந்து விடுகிறார்
2001-ல் நடந்த நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில், 2013-ல் தூக்கிலிடப்பட்ட அப்ஸல் குரு,பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ய தன்னை டெல்லிக்கு அனுப்பியதே DSP தேவேந்தர் சிங் தான் என்று அவரது வழக்கறிஞர் சுஷில்குமாருக்கு எழுதிய கடிதத்திலேயே குறிப்பிட்டுள்ளார்
NIA-வால் கைது செய்யப்பட்ட நபரை எப்படி டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் டெல்லி அழைத்துவந்தனர் என்பது யாருக்கும் புரியாத புதிர்.
டெல்லி போலீசாரும்,குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை,NIA-வும் செய்யவில்லை.
ஆகையால்,ஜம்மு காஷ்மீர் போலீசாரால் 20 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நவீது பாபாவோடு கைது செய்யப்பட்ட தேவேந்தர் சிங் ஆறு மாதத்தில் ஜாமீனில் ஜாலியாக வெளியில் வந்துவிட்டாரா சிறைக்குள் தான் இருக்கிறாரா என்று கடவுளுக்கு தான் தெரியும்
மற்றொரு பக்கம் என்ன நடக்கிறதென்றால்…
கடந்த 21-07-22-ம் தேதியன்று புலனாய்வு ஏஜென்சிகள் மூலமாக மத்திய அரசு எதிர்கட்சிகளை அச்சுறுத்துகிறது,பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறதென எதிர்கட்சித்தலைவர்கள் ஒன்றிணைத்து கூட்டறிக்கை வெளியிட்டதை நினைவூட்ட விரும்புகிறேன்
சரி இப்போது தமிழகத்தின் பிரச்சனைக்கு வரலாம்..
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில்,நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென பிஜேபி தலைவர் அண்ணாமலை
உளவுத்துறை தலைவர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது முன்வைத்திருக்கும் குற்றசாட்டு மிகவும் தீவிரமானது.
ஒரு அரசு ஊழியர் மீது லஞ்சம் வாங்கிவிட்டார் என சொல்லப்படும் புகாருக்கும்,அவரால் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என கொடுக்கப்படும் புகாருக்கும் வித்யாசம் இருக்கிறது.
டேவிட்சன் தேவாசீர்வாதம் என்ற காவல்துறை அதிகாரி,அரசு கொடுக்கும் ஊதியத்தை தவிர வேறு எதையும் பெறாதவர் என்றோ, அப்பழுக்கற்ற பரிசுத்தர் என்றோ யாரும் சொல்லவில்லை
எல்லா மனிதர்களிடம் இயல்பாக இருப்பது போல சில நிறை குறைகள் அவரிடமும் இருக்கலாம்
ஆனால்,
சாதாரண அரசு ஊழியர்களே தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் நிலையில்
ஒரு IPS அதிகாரி பணம் சம்பாதிக்க பலவழிகள் இருக்கும் தானே!
அவ்வளவு ஏன் வாயைத்திறந்து கேட்காமலே எல்லாமும் கிடைக்கக்கூடிய பதவிகளில் கூட அவர் இருந்துள்ளார்.
அப்படி இருக்க,
சில ஆயிரம் ரூபாய்களுக்காக போலி பாஸ்போர்ட் விவகாரத்திற்கு உதவி செய்தார் என்ற குற்றசாட்டை வைப்பது மிகவும் அபாண்டமானது. அயோக்கியத்தனமானது
உண்மையில்
தமிழக அரசிற்கு எதிராக யாரோ பெரும் சதித்திட்டம் தீட்டுகிறார்களோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.
யோசித்துப்பாருங்கள்.
ஒரு மாநிலத்தின் நல்லது, கெட்டது என எல்லாவற்றிலும் முக்கிய அங்கம் வகிக்கக்கூடிய பதவி உளவுத்துறை தலைவர் பதவி.
அவர் மீது,தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல் குற்றசாட்டு வைப்பதும்,
NIA விசாரணை கேட்பதும் ஆழமான அரசியல் உள்நோக்கம் கொண்டது.
ஒருவேளை NIA விசாரணைக்கு எடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம்,என்ன நடக்கும் ?
அவரது செல்போன், வாட்சப் உரையாடல்கள் என அனைத்தையும் NIA
சேகரிக்கத்தொடங்கிவிடும்
மாநிலத்தின் உளவுத்துறை தலைவராக முதலமைச்சரோடும்,பிற முக்கியமான அதிகாரிகளோடும் அதிகம் பேசியிருப்பார்.
அவர்களது உரையாடலும் NIA -வால் கைப்பற்றப்படும்.
யாரை உளவு பார்க்க பெகாஸஸ் வாங்கப்பட்டது என்ற விவகாரத்திற்கே விடை தெரியாத சூழலில், தமிழக முதலமைச்சரின் செல்போனை டேப் செய்யும் பணியை, டேவிட்சன் தேவாசீர்வாதம் வழக்கை காரணமாக காட்டி NIA அதிகாரப்பூர்வமாகவே செய்யத்தொடங்கும்.
அதை அவர்கள் அரசியல் மிரட்டலுக்கு பயன்படுத்த மாட்டார்கள் என்ற உத்திரவாதம் ஏதாவது இருக்கிறதா ?
அவ்வளவு நல்லவர்களா என்ன ?
Q-Branch,Intelegence-IG,SP,Commissioner என பல பதவிகளில்,காவல்துறையில் பணியாற்றி, தற்போது உளவுத்துறை தலைவராக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம், அவரது சிறப்பான பணிக்காக ஜனாதிபதி பதக்கமும் பெற்றவர்.
ஆனால்,அவர் மீது தான் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்ற குற்றசாட்டை அரசியல் கட்சியின் தலைவரை வைத்து வீசி இருக்கிறார்கள்
தவறில்லை.
ஆனால், 1995-ம் ஆண்டு பேட்ச் IPS அதிகாரியான டேவிட்சன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையில் பணியாற்றிவருபவர்.
தற்போது அவர் வகிக்கும் உளவுத்துறை தலைவர் பதவி மீது உடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஆசை இருக்கலாம்.அதனால் டேவிட்சனுக்கு எதிராக கூட அவருடைய சக அதிகாரிகள் செயல்படலாம்
ஒருவேளை,போலி பாஸ்போர்ட் விவகாரத்தில்,
முறையாக பணியை செய்யாத காவல்துறையினர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதா அல்லது சட்டரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதா என்ற ஈகோ மோதலில் கூட இந்த பிரச்னை வெடித்திருக்கலாம்.
ஆனால், ஒன்று நிச்சயம்,
உளவுத்துறை தலைவராக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது தமிழக பிஜேபி தலைவர் வைத்திருக்கும் குற்றசாட்டு என்பது அவர் மீதானது மட்டுமல்ல.
தமிழக அரசின் மீதானதும் கூட..
அப்படி என்றால்..
நீங்களும்,நானும் கூட நாட்டிற்கு அச்சுறுத்தல் என்றே அர்த்தம்..
அதாவது மொத்த தமிழகமும்,நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக இருக்கிறது என்று தானே புரிந்து கொள்ள வேண்டும்.
5000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஒரு IPS அதிகாரி நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் உண்டாக்கும் பணியை செய்துள்ளார் என்ற குற்றசாட்டு எவ்வளவு அபத்தமானது ! அபாயகரமானது
யோசித்துப்பாருங்கள்
எவ்வளவு மோசமான குற்றசாட்டு..
முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டதாக ஏன் இருக்கக்கூடாது ?
டேவிட்சன் தேவாசீர்வாதத்தை வீழ்த்த துடிக்கும் IPS அதிகாரிகள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்,
சீனியராகவோ,ஜுனியராகவோ உங்களோடு பணியாற்றி வரும் ஒருவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு மிகவும் அநியாயமானது.
இதை கண்டும் காணாமல்,நீங்கள் நகர்ந்து போகலாம்.. அது உங்கள் இஷ்டம்
ஆனால்,தமிழகத்தை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் மாநிலமாக சித்தரிக்க முயலும் அரசியல் சதித்திட்டத்தை நீங்கள் மட்டுமல்ல,தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவரும் நிச்சயம் எதிர்க்கவேண்டும்
ஏனென்றால்
இது வந்தாரை வாழவைக்கும் பூமி
மறந்துவிடாதீர்கள்..