அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் கூகுள், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 8,730 கோடி) முதலீட்டை அறிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம், ஆந்திரப்பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 ஜிகாவாட் திறன் கொண்ட, ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா சென்டர் கிளஸ்டர் கட்டப்பட உள்ளது. 2028-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்படுத்தப்படும்.
இந்த 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு, டேட்டா சென்டர்களுக்கு மட்டுமல்ல; கூகுள் மூலமாக மூன்று உயர் திறன் கடலடிப் கேபிள்கள், தனிப்பட்ட கேபிள் லாண்டிங் ஸ்டேஷன்கள் மற்றும் விரிவான மெட்ரோ ஃபைபர் நெட்வொர்க்குகள் ஆகியவை உருவாக்கப்படுகின்றன. இதனால் இந்தியாவின் தரவு பரிமாற்ற திறன் மிகவும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த திட்டம் ஆந்திரப்பிரதேசத்தை உலக தரவு மைய ஹப்பாக மாற்றும் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். 2024 டிசம்பரில் கூகுள் மற்றும் ஆந்திர அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. மாநில அரசு தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் மற்றும் பதிப்புரிமைச் சட்டங்களில் திருத்தங்களை செய்து, டேட்டா நகரங்கள் உருவாக்க சட்ட ரீதியான ஆதரவையும் உருவாக்கியுள்ளது.
இத்திட்டம் தொடர்பான இறுதி ஒப்பந்தம் விரைவில் முடிவடையவுள்ளது. ஆந்திராவின் முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் நிறைவேறினால், இந்தியாவின் டிஜிட்டல் அடித்தளம் பலபேறு வளர்ச்சி காணும்.
புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி, கிளவுட் சேவைகள், செயற்கை நுண்ணறிவு, தரவு பாதுகாப்பு மற்றும் 5G உள்ளடக்கிய தொழில்நுட்பங்கள் வேகமாக முன்னேற்றம் பெறும் என நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்கின்றனர்.