அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை (9/03/2022) அதிகாலை 2.52 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
போர்ட்பிளேயரிலிருந்து சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தில்லிபூர் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. சில விநாடிகள் மட்டுமே இந்த நிலநடுக்கம் நீடித்தது. இதனால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றாலும், பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.1 ஆகப் பதிவாகி இருந்தது என்று தேசியப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் அமைந்துள்ள லே மாவட்டத்தில் உள்ள அல்ச்சி கிராமத்தில் காலை 7.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரிக்டர் அளவுகோலில் இது 4.1 ஆகப் பதிவாகியிருந்தது.