அன்புமணி நடத்திய பொதுக்குழு.., ஒற்றை வார்த்தையில் பதிலளித்த ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகன் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பாமக பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது.

இந்த பொதுக்குழுவில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படன. பாமக தலைவர் அன்புமணியின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு காலம் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து , அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்து செய்தியாளர்கள், பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராமதாஸ், “சொல்வதற்கு ஏதுமில்லை” என பதிலளித்துவிட்டு சென்றார்.

Related News

Latest News