சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
“அண்ணல் அம்பேத்கரின் 69-ஆம் நினைவு நாளில் அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து போற்றுவோம்!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டியுமான அண்ணல் அம்பேத்கரின் 69-ஆம் நினைவு நாள் இன்று. இந்த நாளில் அண்ணலை வணங்குகிறேன்.
அண்ணல் அம்பேத்கர் இல்லாமல் இந்திய அரசியல் அரசியல் இல்லை. சமூகநீதியும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும் அவர் இல்லாமல் சாத்தியமாகியிருக்காது. அவர் ஆற்றிய அரசியல் பணிகளையும், சமூகப் பணிகளையும் இந்த நாளில் நினைவு கூர்ந்து அவரை அனைவரும் போற்றுவோம்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
