பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நீடிப்பார் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச்செயலாளராக வடிவேல் ராவணன் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், பாமக பொதுக்குழுக்கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் முதலில் பேசிய அன்புமணி, கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தார்.