Saturday, February 15, 2025

“பரந்தூருக்கு பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் கொண்டு வர வேண்டும்” -அன்புமணி ராமதாஸ்

பரந்தூர் விமான நிலையத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அம்மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

பரந்தூர் விமான நிலையம் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு தேவைப்படுகிறது. அதேநேரம் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பரந்தூருக்கு பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருப்போரூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் இப்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தையும், இதனையும் மெட்ரோ ரயில் மூலம் எளிதாக இணைக்க முடியும். நிலையங்களுக்கு இடையேயான இடைவெளியும் குறைவாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest news