நட்பு குறித்து ஆனந்த் மஹிந்திரா செய்த ட்விட்

249
Advertisement

தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது டுவிட்டரி வாயிலாக திறமைமிக்க நபர்களின் வீடியோகள், வித்தியாசம் நிறைந்த மற்றும் ஆச்சரியமூட்ட கூடிய பதிவுகளை பகிர்ந்து மற்றவர்களை ஊக்குவிதம் தன் கருத்தை கூறுவார் .

இந்நிலையில் சமீபத்திய பதிவில், நட்பு பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டு வாசக நெஞ்சங்களை அள்ளியுள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில், டர்னிங் டர்டில் என்ற ஆங்கில சொற்றொடரானது, தலைகீழாக புரட்டிப்போடுவது என்று பொருள். ஆனால், இந்த வீடியோவை பார்த்த பின்பு, உதவி தேவையாக உள்ள நண்பருக்கு உதவுவது என்பதே இதன் பொருளாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

உங்களது சொந்த காலில் நீங்கள் மீண்டும் எழுந்து நிற்கவும், வளர்ச்சி பெறவும் உதவும் நண்பரை கொண்டிருப்பது, வாழ்வில் கிடைத்த மிக சிறந்த பரிசுகளில் ஒன்று என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் , சரிவில் அமைந்த புல்வெளி மீது ஆமை (டர்டில்) ஒன்று மல்லாக்க கிடக்கிறது. அதனால், இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. தனது நான்கு கால்களையும் வானை நோக்கி காற்றிலேயே உதைத்து, திரும்ப முயற்சித்தும் அது பலன் தரவில்லை.

இதனை சற்று தொலைவில் இருந்தபடி மற்றொரு ஆமை பார்த்து கொண்டிருக்கிறது. பார்த்த தருணத்தில் ஆமை வேகத்தில் இல்லாமல், விறுவிறுவென தனது நண்பனை நோக்கி சென்று அதனை முட்டி, மோதி திருப்பி போடுகிறது.இதன்பின் சீரான நிலைக்கு வந்த அந்த நண்பன் ஆமை மெதுவாக முன்னோக்கி நடந்து செல்கிறது.