செல்போன் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் சரிசெய்ய செலவில்லாத எளிய வழி-…

167
Advertisement

செல்போன் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் என்ன செய்தெவனத்
தெரியாமல் பரிதவிப்பில் உள்ளவர்களுக்காக…

மழைக்காலத்தில் மட்டுமன்றி, சாதாரண நேரத்திலம்கூட சில நேரத்தில்
நம்மையறியாமல் செல்போனைத் தண்ணீருக்குள் தவறவிட்டுவிடுவோம்.
செல்போன் வீணாகிப் போய்விடுமோ எனக் கவலைப்படுவோம். உடனே
செல்போனை எடுத்து மூடியைக் கழற்றி, பேட்டரியைத் தனியே வெயிலில்
உலர வைப்போம்.

இனி, அப்படிக் கவலைப்படவில்லை.

தண்ணீருக்குள் விழுந்துவிட்ட செல்போன் எந்தப் பாதிப்பும் இன்றி
எப்போதும் இயங்க வழியுள்ளது. அதைப் பின்பற்றி செல்போனை
மீண்டும் பயன்படுத்தலாம். அதாவது,

 1. தண்ணீருக்குள் விழுந்துவிட்ட செல்போனை எடுத்து உடனே ஆன்
  செய்யாமல் பேட்டரியைக் கழற்றி செல்போனை அரிசியின்மீது
  வைத்து உலரவையுங்கள்.
 2. பின்பு செல்போன்மீது மறையும்வண்ணம் அரிசியைக் கொட்டுங்கள்.
 3. அரை மணி நேரம் கழித்து அரிசிக்குள் வைத்துள்ள செல்போனை எடுத்து
  சில நிமிடங்கள் வெயிலில் உலரவையுங்கள்.
 4. அதன்பின் ஒரு மணி நேரம் கழித்து பேட்டரியை செல்போனில் போட்டு
  ஆன் செய்து பாருங்கள். இப்போது உங்கள் செல்போன் முன்புபோல் எந்தப் பழுதும் இன்றி, சீராக இயங்கும்.