Sunday, December 28, 2025

கட்சியில் சீட் தர மறுத்ததால் சட்டையை கிழித்துக் கொண்டு அழுத நிர்வாகி

கட்சியில் சீட் கொடுக்க மறுத்ததால் சட்டையை கிழித்து, தரையில் புரண்டு நிர்வாகி ஒருவர் அழுத சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் இன்று காலை லல்லு பிரசாத் யாதவ் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். தரையில் புரண்டு, ட்டையை கிழித்துக் கொண்டு அழுது புலம்பினார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட சீட் தருவதாக கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறி இருந்தார். நானும் எனது தொகுதியில் பணிகளை தொடங்கி விட்டேன். ஆனால் திடீரென ரூ.2.7 கோடி ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். நான் எனது குழந்தைகளின் திருமணத்தை நிறுத்தி பணத்தை தயார் செய்தேன். தற்போது சீட் தராமல் எல்லாம் முடிந்து விட்டது. குறைந்த பட்சமாக எனது பணத்தையாவது திருப்பி தர வேண்டும் என கூறியுள்ளார்.

Related News

Latest News