Monday, May 5, 2025

ஆ.ராசா மீது சாய்ந்த மின்கம்பம் – மேடையில் நடந்த அதிர்ச்சி

மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக எம்பி. ஆ.ராசா பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்று வீசியதால் மேடையின் அருகே பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் திடீரென சாய்ந்தது.

மின்விளக்கு சாய்வதை அறிந்து சுதாரித்துக்கொண்ட ஆ.ராசா விலகியதால் எந்த காயமும் இன்றி அவர் உயிர் தப்பினார். இதையடுத்து உடனடியாக ஆ.ராசா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.

Latest news