தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்ற குழுவின் 3-வது கூட்டம் சென்னை தலைமைச் செயலக 10-வது மாடி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :-
சென்னை போன்ற மெட்ரோ சிட்டியில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகமாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவது தான் இதைக் குறைக்க சிறந்த வழி! அதை ஊக்குவிப்பதற்காகதான், எம்.டி.சி. மூலமாக, முதற்கட்டமாக 120 மின்சாரப் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம்.
மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால், மேலும் 600 மின்சாரப் பஸ்களை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்போகிறோம். இதனால், நெரிசல் குறையும், காற்று மாசு குறையும், எல்லோருடைய நேரமும் மிச்சமாகும்.
