Friday, March 14, 2025

மகாராஷ்டிராவில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது லாரி மோதி விபத்து

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை – அமராவதி விரைவு ரயில் மீது லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. மூடப்பட்ட ரயில்வே கேட்டை லாரி கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்த விபத்து காரணமாக நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது தண்டவாள சீரமைப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

Latest news