மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 27ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணமலை மற்றும் கோவையில் புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தை திறப்பதற்காக அமித்ஷா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜனவரி முதல் வாரத்தில் தமிழகம் வருவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.