Saturday, June 28, 2025

ஈரானுக்கு அமெரிக்கா வழங்கும் 1000 கோடி ‘offer’! கதறும் இஸ்ரேல்! யுத்தமா? பிசினஸ்ஸா?

ஈரான்–இஸ்ரேல் போர் சில நாட்களாகவே உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் இந்த மோதலுக்குப் பிறகு, அதிரடி முடிவொன்றை எடுத்து வருகிறார் அமெரிக்காவின்  அதிபர் டொனால்ட் டிரம்ப். கடந்த வாரம் வரை ஈரானை எதிர்த்து பேசிய டிரம்ப், இப்போது ரூபாய் கணக்கில் ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள மெகா ஒப்பந்தத்தில் தெஹ்ரானுடன் கையெழுத்திட முடிவு செய்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு 20 முதல் 30 பில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை அமெரிக்கா வழங்கும் திட்டம் வகுக்கப்படுகிறது. மேலும், ஈரான்மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்கும் வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது. ஆனால் இஸ்ரேல் இதை ஏற்க மறுக்கிறது.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒரு அதிரடிப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளார். “ஈரானுக்கு எதிராக நாங்கள் போரை தொடங்கியபோது, அமெரிக்கா எதைச் செய்யும் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் நாங்கள் காத்திருக்க மாட்டோம். தேவைப்பட்டால் மீண்டும் ஈரானை தாக்க தயங்கமாட்டோம்” என்று அவர் கூறினார்.

இத்துடன், அவர் மேலும் சொல்லியது என்னவென்றால், “ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமெனியை நாங்கள் கொல்ல முயற்சி செய்தோம். ஆனால் அவர் எட்ட முடியாத இடத்தில் இருந்ததால் அது சாத்தியமாகவில்லை. அவர் எங்கள் எல்லைக்குள் இருந்தால், நாங்கள் அவரை நிச்சயம் ஒழித்திருப்போம்” என்று துடுக்காக கூறியுள்ளார்.

இதே நேரத்தில், அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்பும் இதை நிதானமாகவே ஒப்புக்கொள்கிறார். ஒரு சமூக ஊடகப் பதிவில் டிரம்ப் சொன்னது, “காமெனியின் இருப்பிடம் எங்களுக்குத் தெரியும். அவர் எளிதில் குறி வைக்கும் ஒரு இலக்காக தான் இருக்கிறார். ஆனாலும் இப்போது அவரைத் தாக்க மாட்டோம் — என்றார்.

இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள் உண்மையிலேயே காமெனியை இலக்காகக் கொண்டு செயல்பட்டதையும் பாதுகாப்பு அமைச்சர் உறுதியாகக் கூறுகிறார். மேலும், “இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கு எங்களுக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை. நாங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கள் தீர்மானங்களை எடுக்கிறோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னணியில், ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக மேற்கொண்ட வான்வழித் தாக்குதலால், அதன் முக்கிய செறிவூட்டும் மையங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. ஆனால் ஈரான் மீண்டும் அந்தப் பாதையை நோக்கி பயணிக்கிறது என அமெரிக்க நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதற்குள், இஸ்ரேல் அதை நடக்க விட மாட்டோம் என தன்னம்பிக்கையோடு கூறுகிறது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்கா தனது பழைய எதிரிகளைப் புதிய வர்த்தகத் தோழர்களாக மாறச் செய்கிறதா? அல்லது இதுவும் ஒரு பல்லுறவு அரசியலா? என்பதை வருங்காலமே சொல்லும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news