அமெரிக்கா, கனடாவை நநெருக்கமான நாடு என்று கூட பாராமல் ,அதன் பொருட்களுக்கு 25% வரி விதித்து அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது உலகளாவிய பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது. அதற்குப் பதிலாக, கனடா தற்போது அமெரிக்காவுக்கு ஒரு கடுமையான பதிலடி கொடுத்துள்ளது, மேலும் இதனால் அமெரிக்காவின் ஆட்டோமொபைல் துறையில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமீப நாட்களாகவே, டிரம்ப் கனடாவிற்கு 25% வரி விதிப்பது குறித்து அச்சுறுத்தி வந்தார். இந்தியா, சீனா, ஜப்பான் என பல நாடுகளுக்கும் அவர் வரி விதித்திருந்தாலும், நெருங்கிய நாடான கனடாவுக்கு எப்படி வரி விதிக்க முடியும் என பலரும் கண்டனம் தெரிவித்து கனடாவிற்கு ஆதரவளித்தனர். காரணம், அமெரிக்கா பல முக்கிய துறைகளில் கனடாவை நம்பி இருக்கிறது. எரிசக்தி துறையில் 50%, மரப்பணிகள் துறையில் 80%, அலுமினியம் துறையில் 50% முதல் 60%, இரும்பு துறையில் 15% முதல் 20%, அரிய கனிமங்கள் துறையில் 10% முதல் 25% மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் துறையில் 25% முதல் 30% வரையான பருமனான பங்குகள் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்கின்றன.
இந்நிலையில், கனடா கடுமையாக பதிலடி கொடுத்து, “இன்று முதல், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு CUSMA விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களுக்கு 25% வரி விதிக்கப்படும்” என்று அறிவித்துள்ளது. CUSMA என்பது 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தமாகும், இது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கிடையில் பொருளாதார உறவை ஒழுங்குபடுத்துகிறது. இதன் படி, 75% உதிரி பாகங்கள் இந்த மூன்று நாடுகளிலிருந்து வரவேண்டும், ஆனால் சீனாவிலிருந்து வாங்கப்பட்ட பாகங்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது.
இந்த வரி, அமெரிக்கா தயாரிக்கும் பொருட்களுக்கு கனடாவில் விற்க முடியாது. இதனால் தொழில்கள் குறையும், வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும், மற்றும் பொருளாதார நஷ்டம் ஏற்படும்.
2024-ஆம் ஆண்டில், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு 35.6 பில்லியன் டாலர் மதிப்பில் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய 25% வரி, இந்த ஏற்றுமதி எண்ணிக்கையை பெருமளவில் குறைக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த வர்த்தகப் போர் அமெரிக்காவிற்கு எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். அதனால், இந்த மோதல் தற்காலிகமாக இருந்தாலும், அதன் விளைவுகளை எதிர்நோக்கி பார்ப்பது மிகவும் முக்கியம்.